பாரதிதாசன் சிலை திறப்பு


பாரதிதாசன் சிலை திறப்பு
x
தினத்தந்தி 18 Sep 2018 11:20 PM GMT (Updated: 18 Sep 2018 11:20 PM GMT)

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தில் பெரியார், அண்ணா அரங்கம் திறக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அங்கு புரட்சிப்பாவலர் பாரதிதாசன் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

வரதராஜன்பேட்டை,

நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் ஆகியோர் பேசினர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், அகில இந்திய தமிழ்ச்சங்க பேரவை இணைச்செயலாளர் சோழநம்பியார், தமிழ்த்தேச குடியரசு கட்சி தலைவர் சிலம்பரசன், தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மார்க்சு ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க மாநில துணை செயலாளர் நெப்போலியன் வரவேற்றார். இதை தொடர்ந்து புரட்சிப்பாவலர் பாரதிதாசன் சிலையை புதுக்கோட்டை பாவாணன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் பேராசிரியர் மணியன் எழுதிய ‘பிரபாகரன் காவியம் ’எனும் நூலை தமிழ் முழக்கம் சாகுல் அமீது வெளியிட்டார். அதனை நெய்தல் வேங்கைகள் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் பெற்று கொண்டார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story