சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சஞ்சய் ராவுத் நியமனம்


சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சஞ்சய் ராவுத் நியமனம்
x
தினத்தந்தி 19 Sept 2018 4:53 AM IST (Updated: 19 Sept 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனாவின் நாடாளுமன்ற மக்களவையில் 18 எம்.பி.க்களும், மக்களவையில் 3 பேரும் உள்ளனர்.

மும்பை,

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, 2 எம்.பி.க்கள் குழுவுக்கும் கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவுத்தை தலைவராக நியமித்துள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக, அரசை ஆதரித்து வாக்களிக்க போவதாக சிவசேனா கட்சியை சேர்ந்த சந்திரகாந்த் கைரே தகவல் வெளியிட்டார்.

ஆனால் தலைமையிடம் இருந்து சரியான முடிவு வராமல் அவர் இந்த தகவலை வெளியிட்டதாக கட்சிக்குள் சர்ச்சை எழுந்தது. கடைசி நிமிடத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்துகொள்ளாமல் சிவசேனா வெளியேறியது.

இதுபோன்ற குளறுபடிகளை சரிசெய்ய நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுவின் தலைவராக சஞ்சய் ராவுத் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Next Story