கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைந்தது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயருகிறது.
பெங்களூரு,
பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த விலை குறைப்பு 18-ந் தேதி(நேற்று) முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.
அதன்படி பெங்களூருவில் நேற்று முன்தினம் லிட்டர் ரூ.84.84 ஆக இருந்த பெட்ரோல் விலை நேற்று ரூ.82.91 ஆக குறைந்தது. டீசல் 76 ரூபாய் 25 காசில் இருந்து 74 ரூபாய் 33 காசுகளாக குறைந்தது. அதாவது, பெட்ரோல் விலை 1 ரூபாய் 93 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 92 காசுகளும் குறைந்துள்ளன.

Related Tags :
Next Story