டெல்லியில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு
கர்நாடக கூட்டணி ஆட்சியில் குழப்பம் எழுந்துள்ள நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இன்று(புதன்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரசில் ஜார்கிகோளி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பெலகாவி காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது, லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
காங்கிரசில் ேமலும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். மந்திரி பதவி கிடைக்காத சிலர் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் இன்று(புதன்கிழமை) டெல்லியில் சந்தித்து பேச இருக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் மூன்று பேரும் டெல்லி சென்றுள்ளனர். அத்துடன் போர்க்கொடி தூக்கியுள்ள ஜார்கிகோளி சகோதரர்களில் ஒருவரான முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வும் டெல்லி சென்றுள்ளார். அவரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் காங்கிரசில் எழுந்துள்ள குழப்பம், மேல்-சபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரசில் எழுந்துள்ள குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story