கூலிங் கிளாஸ் கேமரா


கூலிங் கிளாஸ் கேமரா
x
தினத்தந்தி 19 Sept 2018 1:44 PM IST (Updated: 19 Sept 2018 1:44 PM IST)
t-max-icont-min-icon

ஒரு காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்து வியந்த ‘ஸ்பை கேட்ஜட்ஸ்’ (உளவு சாதனங்கள்) அனைத்துமே தற்போது உண்மையாகி வருகிறது.

அன்று கற்பனையாக உருவாக்கப்பட்ட கருவிகள் அனைத்தும், இன்று நவீன தொழில்நுட்பத்தால் உயிர் பெற்றுவருகின்றன. அதில் கூலிங் கிளாஸ் கேமராவும் ஒன்று. ‘ஸ்நாப்சாட்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கூலிங் கிளாஸ் கேமராவை, கண்ணாடியாகவும் பயன்படுத்தலாம். அதேசமயம் உளவு பார்க்கும் கேமராவாகவும் பயன்படுத்தலாம்.

ஸ்நாப்சாட் நிறுவனம் நிகோ மற்றும் வெரோனிகா என்ற இரண்டு மாடல் கூலிங் கிளாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த கண்ணாடிகள் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவை. இதனால் 2.0 என பெயரிட்டுள்ளது.

இந்தக் கண்ணாடியுடன் இணைந்தவாறு (இன்பில்ட்) கேமரா இருப்பதால் இதில் காட்சிகளை பதிவு செய்ய முடியும். நிகோ மற்றும் வெரோனிகா மாடல் கண்ணாடி கேமரா விலை ரூ.14,800 ஆகும்.

இது நீர்புகா (வாட்டர் புரூப்) தன்மை கொண்டது. இதில் புகைப்படம், வீடியோ காட்சிகளை பதிவு செய்யலாம். ஒலியையும் பதிவு செய்ய முடியும். இதனால் காட்சிகளை நண்பர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த கேமராவை ஒரு முறை சார்ஜ் செய்தால், 70 வீடியோ பதிவுகளும், நூற்றுக்கணக்கான புகைப்படங்களும் எடுக்க முடியும். இது, போலரய்டு பிளாக் லென்ஸ் மற்றும் கருப்பு பிரேமில் வந்துள்ளது. இது பார்ப்பதற்கு குளிர் கண்ணாடி (கூலிங் கிளாஸ்) போன்றே இருக்கும். இதில் கேமராவுக்கான லென்ஸ் இருப்பதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும். 

Next Story