உடனடி டிரான்ஸ்லேட்டர்


உடனடி டிரான்ஸ்லேட்டர்
x
தினத்தந்தி 19 Sep 2018 8:16 AM GMT (Updated: 19 Sep 2018 8:16 AM GMT)

வெளிநாடு பயணம் செய்ய விரும்புவோர் அஞ்சுவதே ‘மொழி தெரியாத நாட்டில் எப்படி சமாளிப்பது’ என்று தான்.

மாணவர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள், பிற மொழி கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது, ‘ஐபேசி’ நிறுவனத்தின் உடனடி டிரான்ஸ்லேட்டர்.

சிறிய ரிமோட் போன்று இருக்கும் இந்த வயர்லெஸ் கருவியில் 40 மொழிகளை மொழிபெயர்க்கும் வசதி உள்ளது.

இக்கருவியில் ‘ஏ’ மற்றும் ‘பி’ என்று இரு பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த மொழியை டிரான்ஸ்லேட் செய்ய வேண்டுமோ அதை ‘ஏ’ வில் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்க விரும்பினால், ‘ஏ’ பட்டனில் ஆங்கிலத்தையும், ‘பி’ பட்டனில் ஜெர்மன் மொழியையும் தேர்வு செய்து கொண்டு, உங்கள் செல்போன் மூலம் பேசினால் நீங்கள் ஆங்கிலத்தில் பேசப்பேச கருவி ஜெர்மன் மொழியில் பேசும்.

பேசுவது மட்டுமின்றி டைப் செய்தாலும் மொழிபெயர்த்து மொபைல் ஸ்க்ரீனில் காண்பித்து விடும்.

உலகின் முக்கியமான மொழிகள் அனைத்தும் இக்கருவியில் இடம்பெற்றுள்ளன. இதனுள் இரண்டு மைக்ரோபோன்கள் உள்ளன. குரலை கேட்பதற்கும், இரைச்சல் இன்றி தெளிவாக பேசவும் இவை உதவுகின்றன. இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் உபயோகிக்கலாம்.

இனி என்ன ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ தான். 

Next Story