கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
சங்கரன்கோவிலில் வேளாண்மை துறையின் மூலம், நமக்கு நாம் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று சங்கரன்கோவிலில் நடந்தது.
நெல்லை,
சங்கரன்கோவிலில் வேளாண்மை துறையின் மூலம், நமக்கு நாம் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று சங்கரன்கோவிலில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், நமக்கு நாம் கூட்டு பண்ணைய உற்பத்தியாளர் கம்பெனி அனைத்து விவசாயிகள் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கம்பெனி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கடின முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கம்பெனியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இப்பகுதி விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலத்திலேயே சிறந்த கம்பெனி நெல்லை மாவட்ட நமக்கு நாம் கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி என உருவாக்கிட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் செந்தில்வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.