பிளஸ்-2 மாணவி தற்கொலை: ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது


பிளஸ்-2 மாணவி தற்கொலை: ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 20 Sept 2018 3:15 AM IST (Updated: 20 Sept 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

நம்பியூர், 


நம்பியூர் அருகே பட்டிமணியக்காரன்பாளையத்தில் அரசு மாதிரி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 16-ந் தேதி அந்த மாணவி திடீரென வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து அதிகாரிகளிடம், ‘பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சண்முகம் என்பவர் தற்கொலை செய்துகொண்ட மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். எனவே அவர் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் தெரிவித்தனர். பின்னர் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உத்தரவிட்டார்.

மேலும் ஆசிரியர் சண்முகம் மீது நம்பியூர் போலீசார் போக்சோ உள்பட 3 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் ஆசிரியர் சண்முகம் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story