150 பவுன் நகையுடன், தொழில் அதிபர் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்


150 பவுன் நகையுடன், தொழில் அதிபர் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2018 3:10 AM IST (Updated: 20 Sept 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் 150 பவுன் நகையுடன், தொழிலதிபர் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழித்துறை, 


மார்த்தாண்டத்தை சேர்ந்த 50 வயதுடைய தொழில் அதிபர் ஒருவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 40 வயதுடைய மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே 37 வயதுடைய அரசியல் கட்சி பிரமுகர் மரப்பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி, மனைவியும் குழந்தையும் உள்ளனர்.

தொழில் தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகரும், தொழில் அதிபரும் பணம் கொடுக்கல்- வாங்கல் வைத்திருந்தனர். இதற்காக அரசியல் கட்சி பிரமுகர் அடிக்கடி தொழில் அதிபர் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அவரது மனைவியிடம் அரசியல் கட்சி பிரமுகர் சகஜமாக பேசி பழகி வந்தார். நாளடைவில் இ்ந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இதுபற்றி தெரியவந்ததும் தொழில் அதிபர் அவர்களை கண்டித் தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த தொழில் அதிபரின் மனைவி மாயமாகி விட்டார். அத்துடன் பீரோவில் இருந்த 150 பவுன் நகை மற்றும் பணமும் மாயமாகி இருந்தது. அவர் நகை, பணத்துடன் கள்ளக்காதலனுடன் ஓடியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, தொழில் அதிபரின் மனைவியை தேடி வருகிறார்கள். 

Next Story