தானியங்கி விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் கயிறு தரைவிரிப்பு உற்பத்தி ஆலையை பார்வையிட்ட கர்நாடக மந்திரி


தானியங்கி விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் கயிறு தரைவிரிப்பு உற்பத்தி ஆலையை பார்வையிட்ட கர்நாடக மந்திரி
x
தினத்தந்தி 20 Sept 2018 4:15 AM IST (Updated: 20 Sept 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே தானியங்கி விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் கயிறு தரைவிரிப்பு உற்பத்தி ஆலையை கர்நாடக மந்திரி பார்வையிட்டார்.

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஊதியூரில் காங்கேயம் காயர் கிளஸ்டர் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தானியங்கி விசைத்தறி மூலம் கயிறு தரை விரிப்பு மற்றும் கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த ஆலைக்கு கர்நாடக மாநில தொழில்துறை மந்திரி எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் மற்றும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவலிங்க கவுடா, பாலகிருஷ்ணன், கர்நாடக மாநில கயிறு கூட்டுறவு நிர்வாக இயக்குனர் அருண்குமார், கயிறு வாரிய அதிகாரி ரவிக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வந்து பார்வையிட்டனர்.

பின்னர் விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் கயிறு தரை விரிப்பான் குறித்தும் அதன் தொழில்நுட்பம் குறித்தும் கேட்டறிந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு கயிறுவாரிய மண்டல அதிகாரி பூபாலன், காங்கேயம் காயர் கிளஸ்டர் நிர்வாக இயக்குனர் எம்.சரவணக்குமார் ஆகியோர் கயிறு மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்துவிளக்கி கூறினார்கள். முன்னதாக கர்நாடக மந்திரி தலைமையிலான குழுவினரை அதிகாரிகள் வரவேற்றனர்.


Next Story