திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள்
சம்பா, தாளடி சாகுபடி பருவத்தில் 100 சதவீதம் திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆட்சிக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் 2017-18-ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவின விவரங்கள் குறித்து தணிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட தணிக்கை அறிக்கை ஆட்சிக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. 2018-19-ம் ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஆட்சிக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:-
அட்மா திட்டத்தின் கீழ் களையெடுக்கும் கருவி வழங்குதல், விதை நேர்த்தி செயல் விளக்கம், பசுந்தாள் உர விதைகள் உற்பத்தி மானியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை துரிதமாக செயல்படுத்திட வேண்டும். மேலும், சம்பா, தாளடி பருவத்தில் 100 சதவிகிதம் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை அனைத்து விவசாயிகளும் கடைபிடித்திட மேற்கொள்ள வேண்டிய விளம்பர பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொ) ஜஸ்டின், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முருகானந்தம், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் கணேசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் பழனியப்பன், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story