‘கியாஸ் பங்க்’க்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம்
காசிமேட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘கியாஸ் பங்க்’க்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்பும் பங்க் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புக்கு மத்தியில் இந்த பங்க் திறக்கப்பட்டுள்ளதால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக மீண்டும் ‘கியாஸ் பங்கை’ முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஒய்.எம்.சி.ஏ.குப்பம், சி.ஜி.காலனி, விநாயகபுரம், அமராஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அந்த ‘கியாஸ் பங்குக்கு’ எதிராகவும், அதற்கு அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்துபோக செய்தனர்.

இதை மூடக்கோரி, அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் உள்பட பொதுமக்கள் அந்த ‘கியாஸ் பங்கை’ முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர்.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக மீண்டும் ‘கியாஸ் பங்கை’ முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஒய்.எம்.சி.ஏ.குப்பம், சி.ஜி.காலனி, விநாயகபுரம், அமராஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அந்த ‘கியாஸ் பங்குக்கு’ எதிராகவும், அதற்கு அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்துபோக செய்தனர்.
Related Tags :
Next Story