நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நேற்று 10 காசுகள் சரிவடைந்து, 330 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 340 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 330 காசுகளாக சரிவடைந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:-
சென்னை-365, ஐதராபாத்-330, விஜயவாடா, தனுகு-376, பார்வாலா-356, மும்பை-391, மைசூரு-340, பெங்களூரு-355, கொல்கத்தா-427, டெல்லி-378.
கறிக்கோழி கிலோ ரூ.60-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.76-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
வடமாநிலங்களில் ஸ்ராவன் பண்டிகை முடிவடைந்து விட்டதால் அங்கு முட்டை விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனால் பிறமண்டலங்களில் முட்டையின் விலை உயர்ந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் கூறினர்.

Related Tags :
Next Story