கூடுவாஞ்சேரியில் பஸ்-கார் மோதல்; 2 பேர் பலி
கூடுவாஞ்சேரியில் பஸ்-கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
வண்டலூர்,
விருதுநகர் டவுன் பாரப்பட்டி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). இவரது மனைவி செல்வி (55). இவர்களது உறவினர் அருப்புக்கோட்டை ஒச்சிசாமி கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி சித்ரா (44), இவரது மகள் தாரணி (17).
இவர்கள் 4 பேரும் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தரணிபாலன் என்பவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் இருந்து காரில் சென்னைக்கு வந்தனர்.
காரை ஜெயகாந்தன் (38), என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை கார் கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது முன்னால் சென்ற அரசு பஸ் கூடுவாஞ்சேரியில் இருந்து குமிழி செல்வதற்காக மின்வாரியம் அருகே உள்ள வளைவில் திரும்பியது. அப்போது கார் பஸ்சின் வலது புறமாக பக்கவாட்டில் மோதியது.
இதில் காரில் அமர்ந்திருந்த பாலகிருஷ்ணன், சித்ரா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். ஜெயகாந்தன், செல்வி, தாரணி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர் களை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை கிரேன் மூலம் சாலையில் இருந்து அகற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்ட காரில் இருந்து மீட்கப்பட்ட ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500, 10 பவுன் நகை, 3 செல்போன்களை பாலகிருஷ்ணனின் மகனிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் மகிதா ஒப்படைத்தனர்.'

Related Tags :
Next Story