வெங்கல் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு


வெங்கல் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 22 Sept 2018 3:30 AM IST (Updated: 22 Sept 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

வெங்கல் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடப்பட்டது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள எரையூர் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 36). இங்குள்ள பஜார் தெருவில் மளிகை கடை மற்றும் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சிமெண்டு விற்பனை செய்த ரூ.80 ஆயிரத்தை கடையில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க தணிகாசலம் சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.80 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து தணிகாசலம் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story