‘யானைப் பறவைகள்’ எப்படி அழிந்தன?
மடகாஸ்கரில் புதைபடிவ நிலையில் கண்டறியப்பட்டுள்ள யானைப் பறவைகளின் எலும்புகள், அவற்றின் அழிவு குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
மடகாஸ்கரில் வாழ்ந்த யானைப் பறவைகள் வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களால் உணவுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது கிடைத்துள்ள இந்தப் பறவையின் எலும்புகள், சுமார் 10 ஆயிரம் வருடங்களுக்கு முந்தியவை என்று கண்டறியப் பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் கண்டறியப் படுவதற்கு முன்புவரை மனிதர்கள் இத்தீவுக்குச் சுமார் 2 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால், தற்போது கிடைத் திருக்கும் ஆதாரங்கள், இத்தீவுக்கு மனிதர்களின் வருகை மேலும் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்கும் எனக் கருத வைத்திருக்கிறது என்று லண்டன் விலங்கியல் சங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்ஸ்போர்டு தெரிவித்துள்ளார்.
இந்த யானைப் பறவைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்திருக்கின்றன. அவற்றை மிகக் குறுகிய காலத்தில் மொத்தமாக அழித்துவிடாமல், அவற்றோடு பல்லாயிரம் ஆண்டுகள் மனிதர்கள் இணைந்து வாழ்ந்ததாகத் தெரிகிறது.
‘யானைப் பறவைகள் மற்றும் தற்போது அழிந்துவிட்ட பிற விலங்கினங்களோடு மனிதர்கள் 9 ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந் திருப்பதாகத் தோன்றுகிறது’ என்று ஹன்ஸ்போர்டு கூறுகிறார்.
சுமார் 500 கிலோ எடையும், மூன்று மீட்டர் உயரமும் கொண்டிருந்த யானைப் பறவை களின் முட்டைகள் டைனோசர்களின் முட்டையை விட பெரிதாக இருந்திருக்கின்றன.
ஏப்யோர்னிஸ், முல்லேரோர்னிஸ் ஆகிய யானைப் பறவைகள் அதே காலத்தில் வாழ்ந்து பிறகு அழிந்துபோன விலங்கினமான லெமூர் களுடன் மடகாஸ்கரில் காணப்பட்டிருக்கின்றன.
இந்தப் பறவைகள் எப்படி, எதற்காகக் கொல்லப்பட்டன, அதில் எவ்வளவு மனிதர்கள் ஈடுபட்டார்கள் என்பது குறித்துப் பலரும் பலவித கருத்துகளைக் கூறுகிறார்கள்.
ஆனால், ‘இதுசார்ந்த கூடுதல் தொல்பொருள் ஆதாரங்களை நாங்கள் திரட்டும்வரை இந்த பறவைகளை அழித்த மனிதர்கள் குறித்த தகவல் தெரியவராது’ என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சக ஆராய்ச்சி யாளரான ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேட்ரிசியா ரைட் கூறுகிறார்.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை மனிதனால் உயிரினங் களுக்கு ஆபத்து தான்!
Related Tags :
Next Story