கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு


கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு
x
தினத்தந்தி 23 Sept 2018 4:30 AM IST (Updated: 22 Sept 2018 8:17 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், கடற்கரையின் அழகை அதிகரிக்கும் வகையில் ரூ.9 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடற்கரை காட்சிகோபுரம் முதல் சன்செட் பாயிண்ட் வரை சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் சிமெண்டு இருக்கைகள், அலங்கார தரை ஓடுகள், புல்வெளிகள், அலங்கார மின்விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை நேற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளுடன் பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, வளர்ச்சி கழக பொது மேலாளர் மோகன்ராஜ், திட்ட பொறியாளர் சங்கரலிங்கம், குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் ஜாக்சன் வில்லியம், உதவி செயற்பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இந்த ஆய்வினை தொடர்ந்து, கன்னியாகுமரியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

Next Story