மதுரவாயலில் மாதாந்திர சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி; பெண் கைது


மதுரவாயலில் மாதாந்திர சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி; பெண் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 4:15 AM IST (Updated: 23 Sept 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயலில், மாதாந்திர சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

ஆவடியை சேர்ந்தவர் மீனா. இவர் மதுரவாயல் போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், தன்னுடன் பணிபுரிந்த கொடுங்கையூர் விவேகானந்தர் நகரை சேர்ந்த தனலட்சுமி (வயது 46) என்பவர் மாதாந்திர சீட்டு நடத்தி இதுவரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இதில் என்னுடன் சேர்த்து 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறி இருந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனலட்சுமி மேற்பார்வையாளராக வேலைபார்த்தபோது, தன்னுடன் பணிபுரிந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மாதாந்திர சீட்டு பிடித்து வந்தார்.

பின்னர் நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்ததாக தனலட்சுமி வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரிடம் சீட்டு கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால், அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். மாதாந்திர சீட்டு நடத்தி தனலட்சுமி ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story