வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் 37 பேர் பணி இடைநீக்கம்


வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் 37 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:31 AM IST (Updated: 23 Sept 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் 37 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் உள்ள பல வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தகுதியற்ற வாகனங்களுக்கு தகுதி சான்று (எப்.சி.) வழங்கப்படுவதாக மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்த போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் மாநிலம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக வட்டார போக்குவரத்து ஊழியர்கள் 37 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் பெண் ஊழியர்கள் ஆவர். புனே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 11 ஊழியர்களும், அவுரங்காபாத், தானே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தலா 4 பேரும் அதிகபட்சமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர யவத்மால், கோலாப்பூர், பன்வெல் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story