அடிஅண்ணாமலை அருகே வயல்வெளியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்து கொள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை,
அதேபோல் வேங்கிகால் ஊராட்சி அலுவலக சமுதாய கூடத்தின் அருகில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் அருணா தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்து கொள்வது குறித்து விளக்கமாக கூறப்பட்டது. மேலும் தூய்மை சேவை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடி அண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாங்கல் கிராமத்தில் நேற்று வயல்வெளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
ஊராட்சி செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்து கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அதேபோல் வேங்கிகால் ஊராட்சி அலுவலக சமுதாய கூடத்தின் அருகில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் அருணா தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்து கொள்வது குறித்து விளக்கமாக கூறப்பட்டது. மேலும் தூய்மை சேவை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Related Tags :
Next Story