வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசு தோல்வி ஆளும் கட்சி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியினர் பா.ஜனதா அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான ஆசிஸ் தேஷ்முக் இதையே பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் இவர் பேசுகையில், “பா.ஜனதா ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளின் 2.2 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளது.
புதிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ தொடங்கப்படுவதை பார்க்க முடியவில்லை. இந்தியாவிலேயே உருவாக்குவோம்(மேக் இன் இந்தியா), மராட்டிய முதலீட்டு ஈர்ப்பு முயற்சி போன்றவையும் தோல்வியில் தான் சென்று முடிந்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டவர்களுக்கும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story