பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தி நாடு முழுவதும் ஒரே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சந்தோஷ்குமார், கவுரவ தலைவர் சீரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், இருசக்கர வாகனங்களில் அமர்ந்து அதில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story