பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சிக்குன் குன்யா காய்ச்சல்; பொதுமக்கள் அவதி
கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சிக்குன் குன்யா காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். மேலும் 4 பேர் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பாகூர்,
புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம்பேட் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இங்கு கடந்த சில நாட்களாக திடீரென பரவிய வைரஸ் காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து காய்ச்சல், வாந்தி, உடல்வலி போன்றவை ஏற்படவே கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற குவிந்தனர்.
அதைத்தொடர்ந்து பிள்ளையார்குப்பம் கிராமத்துக்கு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆய்வுக்காக அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இந்தநிலையில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமடையாத நிலையில் பாதிக்கப்பட்ட மணிகண்டன் (வயது 21), மற்றொரு மணிகண்டன் (18), சத்தியபாலன் (43), சுப்ரமணி (50) ஆகிய 4 பேர் நேற்று புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 21 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், ரத்த மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், சிலருக்கு சிக்குன் குன்யா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையொட்டி சுகாதார துறையினர் ஆய்வு நடத்தியதில் பிள்ளையார்குப்பம் குளக்கரை பகுதியில் தேங்கி கிடந்த குப்பையில் கொசுக்கள் உற்பத்தியாகி இருப்பது தெரியவந்தது. அந்த கொசுக்கள் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறுகையில், பிள்ளையார்குப்பத்தில் சிக்குன் குன்யா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. நாளை (இன்று) பிள்ளையார்குப்பம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். ஜிப்மர் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Tags :
Next Story