அடிப்படை வசதிகள் கேட்டு சேடபட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை


அடிப்படை வசதிகள் கேட்டு சேடபட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Sept 2018 4:00 AM IST (Updated: 24 Sept 2018 8:17 PM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யக்கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது, பேரையம்பட்டி, அதிகாரிபட்டி, கீழத்திருமாணிக்கம். இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முற்றுகையிட்டனர்.

 அதிகாரிபட்டி கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராணி தலைமையில் ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, காசிமாயன் ஆகியோருடன் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சாக்கடை கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது, அதனை சரிசெய்ய வேண்டும் என்றும், காலனியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

இதேபோல் பேரையம்பட்டி, கீழத்திருமாணிக்கம் கிராமமக்கள் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் பூப்பாண்டி, ஈஸ்வரன் ஆகியோருடன் கிராமத்தில் உள்ள பேரையம்பட்டி அருந்ததியினர் குடியிருப்பில் குடிநீர் சீராக வழங்கக்கோரியும, கீழத்திருமாணிக்கத்தில் அருந்ததியினருக்காக இலவச வீட்டுமனை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்றும், குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றும் கூறி முற்றுகையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஒன்றிய மேலாளர் ஜெயராமன், முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story