பட்டாசு தொழிலாளர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட பட்டாசு –தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிவகாசியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 850–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் போனஸ் தொகையை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை தொடர்ந்து கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பட்டாசு –தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிவகாசியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.என். தேவா, மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் லாசர், துணை செயலாளர் பிச்சைக்கனி, நகர செயலாளர் முருகன், சுரேஷ்குமார், செல்லச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story