திருப்பதிசாரத்தில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


திருப்பதிசாரத்தில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Sept 2018 3:45 AM IST (Updated: 24 Sept 2018 8:27 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதிசாரத்தில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி போலீஸ் சரகம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்தவர் சிவதாணு. இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. இதில் இளைய மகள் லட்சுமி நாராயினி (வயது 19). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

அவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். மாணவியின் பெற்றோரும், மூத்த சகோதரியும் நாகர்கோவிலில் உள்ள கடைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில தினங்களாக மாணவி யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார். நேற்று முன்தினம் காலையில் வீட்டில் உள்ள அனைவரும் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அதன் பின்பு மாணவி லட்சுமி நாராயினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இரவு வேலை முடிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது லட்சுமி நாராயினி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று, மகளின் உடலை மீட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அனைவரையும் உருக வைத்தது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி திடீரென தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story