மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி மனு
புதுக்கோட்டையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கீரனூரில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி கலைஞர் தமிழ் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.
கூட்டத்தில் கீரனூர் கலைஞர் தமிழ் சங்கத்தினர் சார்பில் கொடுத்த மனுவில், குளத்தூர் தாலுகா கீரனூர் கடை வீதியில் உள்ள அண்ணா மற்றும் காந்தி சிலைகளுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முழுஉருவ சிலை அமைக்க கலைஞர் தமிழ் சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கமல் சுதாகர், மூர்த்தி ஆகியோர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுவதை, 7 நாட்களுக்கு முன்னதாக அனைவருக்கும் தெரியப் படுத்தி அழைப்பு கொடுக்க வேண்டும். கூட்டத்தில் நடந்த வரவு-செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை, திட்ட அறிக்கை என அனைத்து ஆவணங்களையும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
கிராம நலன் கருதி மக்கள் வைக்கும் தீர்மானங்களை அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும். தீர்மான நகல் கேட்கும் நபர்களுக்கு தாமதமின்றி தீர்மான நகல் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
மக்கள் பாதைஅமைப்பினர் சார்பில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சூசை மைக்கேல் கொடுத்த மனுவில், மாவட்ட அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், நாட் குறிப்புகள், பெயர் பலகைகள், முத்திரைகள் முதலியன அனைத்தும் தமிழிலேயே அமைக்க வேண்டும் எனவும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழிலேயே கையெழுத்து போட வேண்டும் எனவும், கடந்த 21.6.1978-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த கலெக்டர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Tags :
Next Story