உடுமலை அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை: பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உடுமலை அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை: பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2018 3:15 AM IST (Updated: 25 Sept 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உடுமலை,

உடுமலை அரசு மருத்துவமனைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் இருந்து தினசரி 1000–க்கும் மேற்பட்ட பொதுமக்களும், தொழிலாளர்களும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நாய்கடிக்கு மருந்து உள்ளிட்ட பலவகையான மருந்துகள் போதுமானதாக இல்லை. பற்றாக்குறையாக உள்ளது. அதனால் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று உடுமலை கச்சேரி வீதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் என்.கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story