குழந்தைகளை பார்க்க நீதிபதியிடம் அனுமதி கேட்ட பேராசிரியை நிர்மலாதேவி


குழந்தைகளை பார்க்க நீதிபதியிடம் அனுமதி கேட்ட பேராசிரியை நிர்மலாதேவி
x
தினத்தந்தி 25 Sept 2018 4:30 AM IST (Updated: 25 Sept 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி குழந்தைகளை பார்க்க நீதிபதியிடம் அனுமதி கேட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

 அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை அக்டோபர் மாதம் 3 ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மூவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.

மூவரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மதுரை ஐகோர்ட்டு ஆகியவற்றில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி மூவரும் விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் 24–ந் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதன்படி நேற்று 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முத்துசாரதா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாயும், வருகிற 3–ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக பேராசிரியை நிர்மலாதேவி, தனது குழந்தைகளை பார்க்க வேண்டும். அதற்கு அனுமதி தர வேண்டும் என்று நீதிபதியிடம் கோரினார். நீதிபதி, நீதிமன்ற உத்தரவைப் பாருங்கள் என்றார். நிர்மலாதேவி உத்தரவு தெரியாது என்றார். உங்களுக்கு வழக்குரைஞர் வைத்துள்ளீர்களா என்றார். நிர்மலா தேவி ஆம் என்றார். வழக்குரைஞரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார். பின்னர்

இதனையடுத்து பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக கூறிய நீத் நீதிபதி முத்துசாரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாயும், வழக்கு விசாரணைக்கு அக்டோபர் 3 ம் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டார்.


Next Story