உலக விண்வெளி வார விழா பேச்சுப்போட்டி: தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு


உலக விண்வெளி வார விழா பேச்சுப்போட்டி: தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு
x
தினத்தந்தி 24 Sep 2018 9:30 PM GMT (Updated: 24 Sep 2018 8:17 PM GMT)

உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு நெல்லையில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) நடத்தப்படும் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் மகேந்திரகிரி பொது மேலாளர் நாராயணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் மகேந்திரகிரி சார்பில், வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்.6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விண்வெளி சுற்றுலா என்ற தலைப்பிலும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு என்ற தலைப்பிலும் போட்டி நடத்தப்பட உள்ளது.

இதில் பேச்சுப் போட்டி வருகிற 4-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நெல்லையில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் நடக்க உள்ளது. போட்டி நேரம் 5 நிமிடம் மட்டுமே. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவில் 2 மாணவர்கள் வீதிம் 4 பிரிவில் 8 மணவர்கள் கலந்து கொள்ளலாம்.

பெயர் பதிவு பங்கேற்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளி மூலமாக வருகிற 3-ந்தேதிக்குள் நிர்வாக அலுவலகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி, நெல்லை- 627133 என்ற முகவரியில் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04637- 281210, 281940, 281230, 94421-40183, 94860-41737, 94434-55411 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதி கடிதத்துடன் தங்கள் சொந்த பொறுப்பில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 

Next Story