டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா
நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லை,
‘பத்மஸ்ரீ’ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை ‘தினத்தந்தி‘ அலுவலகத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ‘தினத்தந்தி’ ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், இணை செயலாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, துணை தலைவர் கணபதிசுந்தரம், இணை செயலாளர் கார்த்திகை செல்வன், சிவந்தி மகா ராஜேந்திரன், பல்லிக்கோட்டை செல்லத்துரை, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், பகுதி செயலாளர் தச்சை மாதவன், மலையங்குளம் முன்னாள் கவுன்சிலர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், துணை செயலாளர் எம்.சி.ராஜன், இளைஞர் அணி இணை செயலாளர் வி.கே.பி.சங்கர், பகுதி செயலாளர் அசன்ஜாபர் அலி, சிறுபான்மை பிரிவு செயலாளர் மீரான், தொழிற்சங்க செயலாளர் ஆவின் அண்ணாசாமி, கே.டி.சி. சின்னபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் உக்கிரபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் டி.எஸ்.முருகன், வேல்பாண்டியன், தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவ அருணா அருண்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சவுண்ட் சரவணன், ருசி அன்சார், புலவர் சாகுல்அமீது, இணை செயலாளர் வானமாமலை, மானூர் ஒன்றிய செயலாளர்கள் குமாரசாமி(தெற்கு), துறையூர் சேகர்(வடக்கு), பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் வைகுண்டராஜா(தெற்கு), மாயாண்டி (வடக்கு), நிர்வாகிகள் ராம்சன் உமா, தமிழ்செல்வி, நாகராஜன், இசக்கியப்பன், எஸ்.பி.ராஜா, அருண்ராஜா, பழனிசங்கர், சிவசுப்பிரமணியன், தச்சை சண்முகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நெல்லை மாவட்ட தலைவர்கள் சங்கர பாண்டியன் (மாநகர்), எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு), பழனிநாடார் (மேற்கு), முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை பாராளுமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, முன்னாள் மாவட்ட தலைவர் உமாபதி சிவன், சிங்கராஜா, மாவட்ட துணை தலைவர்கள் வாகை கணேசன், வெள்ளப்பாண்டி, பால் என்ற சண்முகையா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் அண்ணாமலை, மனோகரன், சொக்கலிங்ககுமார், காவிரி, ரெயில்வே கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மண்டல தலைவர்கள் மாரியப்பன், சுல்தான், சேக், தனசிங்பாண்டியன், அய்யப்பன், வக்கீல் வேல்முருகன், விவசாய அணி தலைவர் சிவன் பாண்டியன், அம்பை நகர தலைவர் முருகேசன், சுரண்டை நகர தலைவர் ஜெயபால், மாநில பேச்சாளர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரசார் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாநில செயலாளர் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ரமேஷ்செல்வன், எஸ்.சி.,எஸ்.டி. மாநில துணை செயலாளர் கடற்கரை, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜெரீனா, வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை, துணை தலைவர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் மாரித்துரை, மண்டல செயலாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், தட்சணமாற நாடார் சங்க பொருளாளர் செல்வராஜ் நாடார் ஆகியோர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story