லாரி மோதி மெக்கானிக் பலி
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே லாரி மோதி மெக்கானிக் பலியானார்.
பண்ருட்டி,
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள நரசிங்கபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிச்சைகாரன் மகன் ஜெயராமன்(வயது 33). இவர் கடலூரில் உள்ள ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்பாது பண்ருட்டி அருகே திருமலை நகர் என்கிற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த மினி லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் தூக்கி வீசப்பட்டார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சும் அவர் மீது ஏறி இறங்கியது.
அதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் பலியானார். இதுகுறிதது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஜெயராமனுக்கு திருமணமாகி சுகன்யா (22) என்கிற மனைவியும், ஆகாஷ்(4), கிரிஷ்(2) என்று இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story