காவிரி உபரி நீரை ஏரி, குளங்களுக்கு நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்


காவிரி உபரி நீரை ஏரி, குளங்களுக்கு நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 26 Sept 2018 3:45 AM IST (Updated: 25 Sept 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

காவிரி உபரி நீரை ஏரி, குளங்களுக்கு நிரப்பக்கோரி நல்லம்பள்ளி, பாலக்கோட்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நல்லம்பள்ளி,

காவிரி உபரி நீரை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நிரப்பக்கோரியும், ஒகேனக்கல் ராசிமணல் திட்டு பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், நல்லம்பள்ளி வாரச் சந்தையில் கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் சண்முகம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் முனிவேல், முருகன், அன்புகார்த்தி, பிரகாஷ் மற்றும் உழவர் பேரியக்க நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டனர். அவர்களுக்கு கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று பாலக்கோடு பஸ் நிலையம் எதிரில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு பா.ம.க. மாநில துணைத்தலைவர் பாடி செல்வம் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் நகர தலைவர் ராஜசேகர், தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வேலு, நகர செயலாளர் சான்பாஷா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். முடிவில் நகர இளைஞர் சங்க தலைவர் சிலம்பு நன்றி கூறினார்.

Next Story