கயத்தாறு நகருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல ஏற்பாடு அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
கயத்தாறு நகருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறு,
கயத்தாறு நகருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பஸ் நிறுத்த கட்டிடம்
கயத்தாறு பழைய பஸ் நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் செலவில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா முன்னிலை வகித்தார்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய பஸ் நிறுத்த கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘மதுரை-நெல்லை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் அனைத்து பஸ்களும் கயத்தாறு நகருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும். கயத்தாறில் அரசு நூலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும்’ என்று கூறினார்.
புதிய குடிநீர் தொட்டி
பின்னர் கழுகுமலை அருகே கே.துரைச்சாமிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு, மின் மோட்டார் அறையுடன் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.
விழாவில் கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், என்ஜினீயர் ஷெரீப், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் அழகர், முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன், வினோ பாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story