உளுந்தூர்பேட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை


உளுந்தூர்பேட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Sept 2018 3:15 AM IST (Updated: 25 Sept 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே கணவர் தாக்கியதால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 30), தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமி அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரது வீட்டுக்கு சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது லட்சுமியை பின்தொடர்ந்து சென்ற திருநாவுக்கரசு, ரவியுடன் லட்சுமி பேசுவதை கண்டு ஆத்திரமடைந்தார். பின்னர் லட்சுமி வீட்டுக்கு வந்ததும் அவரை திருநாவுக்கரசு தாக்கியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் லட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, லட்சுமியின் உடலை பார்வையிட்டு அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லட்சுமியின் தந்தை கலியன் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story