உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் விவசாய இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தல்
விவசாய இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
விவசாய இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடுபொருட்கள் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, கடந்த ஆண்டு ரூ.1,100-க்கு விற்ற ஒரு மூட்டை டி.ஏ.பி. உரம் தற்போது ரூ.1,375 ஆக விலை உயர்ந்து விட்டது. அதேபோன்று 4 கிலோ மக்காச்சோள விதைகள் ரூ.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று அனைத்து விவசாய இடுபொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை உயர்ந்து விட்டன.
மேலும் வெளிச்சந்தைகளிலும், கூட்டுறவு விவசாய சங்கங்களிலும் டி.ஏ.பி. உரம், மக்காச்சோள விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு விதைகளும் மரபணு மாற்றப்பட்டதால், அறுவடைக்கு பின்னர் அந்த விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து, தனியாரிடம் விதைகளை வாங்கும் நிலை உள்ளது.
தட்டுப்பாடின்றி வழங்க...
எனவே விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை அரசே ஏற்பாடு செய்து, கூட்டுறவு சங்கங்களில் நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாவட்ட தலைவர் ரங்கநாயகலு, துணை தலைவர் பரமேசுவரன், ஒன்றிய தலைவர் ஜெயராமன், கருப்பசாமி, முருகன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூர்யகலாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story