காரிமங்கலத்தில் தமிழக முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக நேற்று சேலத்திற்கு சென்றார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலம் அகரம் பிரிவு ரோட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், உதவி கலெக்டர் சிவனருள், அ.தி.மு.க.விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், குப்புசாமி மற்றும் அரசு அதிகாரிகள் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து முதல்- அமைச்சரை வரவேற்றனர்.
இதேபோன்று அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள் வாணவேடிக்கையுடன் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிசாமி, கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், வேலுமணி, கோபால், செல்வராஜ், குமார் ஒன்றிய மாணவரணி செயலாளர் ரவிசங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார்மூலம் சேலத்திற்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story