பாராளுமன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு
வருகிற 2019-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கரூருக்கு கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
கரூர்,
வருகிற 2019-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கரூருக்கு கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மின்னணு எந்திரம் சரிபார்ப்பு பணிக்காக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி குமரேசன், தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார், கரூர் வட்டாட்சியர் ஈஸ்வரன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். பாராளுமன்ற தேர்தலுக்காக கரூர் மாவட்டத்திற்கு என 1,390 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 2,560 பேலட் யூனிட்டுகளும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்ப்பு பணிக்காக பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்திலிருந்து அதிகாரி ஜெய்பிரகாஷ்கவுதம் தலைமையில் 14 பொறியாளர்கள் வந்துள்ளனர்.

Related Tags :
Next Story