மண்வெட்டியால் அடித்து விவசாயி படுகொலை துணை ராணுவ படை முன்னாள் வீரர் கைது


மண்வெட்டியால் அடித்து விவசாயி படுகொலை துணை ராணுவ படை முன்னாள் வீரர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே மண்வெட்டியால் அடித்து விவசாயியை படுகொலை செய்த துணை ராணுவ படை முன்னாள் வீரரை போலீசார் கைது செய்தனர்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள தேவங்குடியை அடுத்து உள்ள கருவேலங்குளத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மகன்கள் பாலையன்(வயது 50), மதன்குமார்(48). இவர்களில் பாலையன் விவசாயி. மதன்குமார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ் காரராக பணியாற்றினார். பின்னர் பணியை விட்டு, விட்டு வீட்டிற்கு திரும்பி விட்டார். அண்ணன்-தம்பி இருவருமே சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் மதன்குமார் நேற்று முன்தினம் இரவு மண்வெட்டியால் தனது அண்ணன் பாலையனை தலையில் அடித்தார். இதில் பாலையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் தேவங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலையன் தலையில் மட்டுமின்றி நெற்றி பொட்டிலும் இடது காலிலும் காயங்கள் இருந்தன.

இது தொடர்பாக தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story