3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் முதல் கட்டமாக 1.26 கி.மீ. தூரம் சுரங்கம் அமைப்பு முதல்-மந்திரி பார்வையிட்டார்

3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் முதல் கட்டமாக 1.26 கி.மீ. தூரம் சுரங்கம் அமைப்பு முதல்-மந்திரி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 26 Sept 2018 5:30 AM IST (Updated: 26 Sept 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் அமையும் 3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் முதல் கட்டமாக 1.26 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பார்வையிட்டார்.

மும்பை,

மும்பையில் அமையும் 3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் முதல் கட்டமாக 1.26 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பார்வையிட்டார்.

மெட்ரோ ரெயில் வழித்தடம்

மும்பையில் பெருகி வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மோனோ, மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், 3-வது மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம் கொலபா -பாந்திரா -சீப்ஸ் வரை 33.5 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடம் சுரங்கமார்க்கமாக அமைக்கப்பட உள்ளது. 27 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒன்றை தவிர மற்ற 26 ரெயில் நிலையங்களும் பூமிக்கடியில் அமைய உள்ளன. இந்த திட்டத்திற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது.

1.26கி.மீ. தூர சுரங்கம்

இதற்காக 4 இடங்களில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், அந்தேரி கிழக்கு மரோலில் இருந்து சர்வதேச விமான நிலையம் வரை 1.26 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி நடந்தது. கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி இங்கு தொடங்கப்பட்ட சுரங்க பணிகள் நேற்று முன்தினம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த சுரங்கம் தோண்ட 259 நாட்கள் ஆனது.

முதல் கட்டமாக மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக அமைக்கப்பட்டு உள்ள சுரங்கத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

Next Story