6 மந்திரிகளின் செயல்திறன் குறித்து ஆய்வு முதல்-மந்திரி பட்னாவிஸ் நடவடிக்கை
6 மந்திரிகளின் செயல் திறன் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு மேற்கொண்டார்.
மும்பை,
6 மந்திரிகளின் செயல் திறன் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்-மந்திரி அறிவிப்பு
மந்திரிகளின் செயல்திறன் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாதது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி அவர் நேற்று அரசு விருந்தினர் மாளிகையான சாயத்திரி இல்லத்தில் வைத்து மந்திரிகள் 6 பேரின் செயல்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வருவாய் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், தொழில் மந்திரி சுபாஸ் தேசாய், வீட்டுவசதி மந்திரி பிரகாஷ் மேத்தா, கல்வி மந்திரி வினோத் தாவ்டே, நீர்வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி பங்கஜா முண்டே ஆகியோரிடம் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகள் ஆவர்.
மக்களை கவர்ந்த திட்டங்கள்
மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தங்களது திட்டங்கள் மற்றும் துறை ரீதியாக மேற்கொண்ட மேம்பாட்டு பணிகள், நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை அவர்கள் முதல்-மந்திரியிடம் கொடுத்தனர்.
மற்ற மந்திரிகளின் செயல்திறன் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாக முதல்-மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story