அரசு அலுவலரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


அரசு அலுவலரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Sept 2018 3:30 AM IST (Updated: 26 Sept 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் அரசு அலுவலரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி, 

நெய்வேலி 4-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் கருப்பையா (வயது 35). வருவாய் ஆய்வாளர். இவருடைய மனைவி போதும்பொண்ணு(34). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என்று தெரிகிறது. இதனால் போதும்பொண்ணு மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போதும்பொண்ணு, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போதும்பொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story