‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மராட்டியத்தில் 1¼ கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு

‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மராட்டியத்தில் 1¼ கோடி குடும்பங்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 26 Sept 2018 5:15 AM IST (Updated: 26 Sept 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1 கோடியே 25 லட்சம் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மும்பை,

மருத்துவ காப்பீட்டு திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஏழை மக்களுக்கான ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத் தார். உலகிலேயே மிகப்பெரிய இந்த காப்பீட்டு திட்டத்தால் நாட்டில் உள்ள 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என அறிவித்தார்.

இந்த திட்டத்தை மராட்டியத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிமுகப்படுத்தினார். அப்போது மாநிலத்தில் 90 சதவீத குடும்பம் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் என தெரிவித்து இருந்தார்.

புறக்கணிப்பு

ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இத்திட்டத்தின் பயனாளிகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

“மராட்டியத்தில் வெறும் 84 லட்சம் குடும்பங்கள் மட்டும் தான் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வறுமை கோட்டிற்கு கீழ் தவித்து வரும் மீதமுள்ள 1 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களை அரசு புறக்கணித்துவிட்டதா?” என்பது உள்ளிட்ட கேள்விகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத்பவார், தனஞ்செய் முண்டே, ஜெயந்த் பாட்டீல், சுப்பிரியா சுலே மற்றும் நவாப் மாலிக் ஆகியோர் தங்கள் ‘டுவிட்டர்’ பக்கத்தில் எழுப்பி உள்ளனர்.

Next Story