தக்கலை அருகே பா.ஜனதா பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை


தக்கலை அருகே பா.ஜனதா பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே பா.ஜனதா பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு விவேகானந்தர் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45), பெயிண்டர். இவர் திருவிதாங்கோடு அருகே உள்ள கோவில் என்ற பகுதியின் பா.ஜனதா கிளை தலைவராக உள்ளார்.இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் –மனைவி, மகள் ஆகியோர் படுக்கை அறையில் தூங்க சென்றனர். மகன் வரவேற்பறையில் உள்ள தொட்டிலில் தூங்கினான்.

நேற்று அதிகாலையில் நாகராஜன், மகனின் தொட்டிலின் அருகே உத்திரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் ஓடிவந்தனர்.  பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார்  விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

 மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகராஜனுக்கு, ஜோதி என்ற மனைவியும், மகளும், மகனும் உள்ளனர்.

Next Story