33-வது ஆண்டு விழாவையொட்டி ரெயில்வே பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு கோட்ட மேலாளர் பார்வையிட்டார்
திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படையின் 33-வது ஆண்டு விழாவையொட்டி நடந்த அணிவகுப்பை கோட்ட மேலாளர் உதய்குமார்ரெட்டி பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திருச்சி,
ரெயில்வே பாதுகாப்பு படை 33-வது ஆண்டு விழா திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார்ரெட்டி கலந்து கொண்டு, ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் கோட்ட மேலாளர் உதய்குமார்ரெட்டி பேசியதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு படையினரின் பணி சிறப்பானதாகும். ரெயில்நிலையங்களில் நடைபெறும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். இதனால் ரெயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்து வருகிறார்கள். திருச்சி கோட்டத்தில் தினமும் 29 ரெயில்களில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை ரெயில்வேக்கு சொந்தமான பொருட்களை திருடியதாக 39 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.80 ஆயிரத்து 786 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் உரிய அனுமதி பெறாமல் உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்த 5,580 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டு மூலம் ரூ.20 லட்சத்து 93 ஆயிரத்து 650 அபராத தொகை செலுத்தி உள்ளனர். ரெயில் நிலையங்களை மாசுப்படுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபட்ட 2,862 பேரிடம் ரூ.7 லட்சத்து 15 ஆயிரத்து 620 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த ஆண்டில் இதுவரை திருச்சி கோட்டத்துக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 126 சிறார்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பயணிகள் தவறவிட்டு சென்ற 31 உடைமைகள்(லக்கேஜ்கள்) மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் கோட்ட மேலாளர் வழங்கினார். இதனை தொடர்ந்து பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் ஜெகநாதன், பயிற்சி மைய முதல்வர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story