விலை அச்சிடாமல் தேன்குழல் முறுக்கு பாக்கெட்டு விற்பனை: ஓட்டல் நிர்வாகத்துக்கு அபராதம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

விலை அச்சிடாமல் தேன்குழல் முறுக்கு பாக்கெட்டு விற்பனை: ஓட்டல் நிர்வாகத்துக்கு அபராதம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Sept 2018 3:00 AM IST (Updated: 27 Sept 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் விலை அச்சிடாமல் தேன்குழல் முறுக்கு பாக்கெட்டு விற்பனை செய்த ஓட்டலுக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் விலை அச்சிடாமல் தேன்குழல் முறுக்கு பாக்கெட்டு விற்பனை செய்த ஓட்டலுக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

முறுக்கு பாக்கெட்

பாளைங்கோட்டையை சேர்ந்தவர் மீனா என்ற சொர்ணகலா (வயது 24). இவர் 27-3-2018 அன்று பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ரூ.50 செலுத்தி தேன்குழல் முறுக்கு பாக்கெட் வாங்கினார். அதில் விலை குறிப்பிடப்படவில்லை. தயாரிப்பு தேதி, எடையும் அச்சிடப்படவில்லை.

இதனால் அவர் அந்த முறுக்கை சாப்பிடவில்லை. ஆசையாய் வாங்கிய முறுக்கை சாப்பிட முடியவில்லை. இது குறித்து அவர் அந்த ஓட்டல் மேலாளர் மற்றும் பங்குதாரரிடம் புகார் கூறினார். இது குறித்து அவர்கள் சரியாக பதில் தெரிவிக்கவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி நாராயணசாமி, உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினர்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

தீர்ப்பில், “தயாரிப்பு தேதி குறிப்பிடாத முறுக்கு விற்பனை செய்த ஓட்டல் நிர்வாகம் ரூ.50-ஐ செர்ணகலாவுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். மேலும் அவருடைய மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.7 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.3 ஆயிரத்தையும் சேர்த்து ஆக மொத்தம் அபராத தொகை ரூ..10 ஆயிரத்து 50-ஐ ஓட்டல் நிர்வாகம் செர்ணகலாவுக்கு கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Next Story