சார்ஜாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் தங்கம் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.8 லட்சம் தங்கம் சிக்கியது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த உஸ்மான்(வயது 30) என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்த சூட்கேசில் துணிகளுக்கு இடையே தங்க கம்பிகள் மற்றும் தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 260 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் அந்த தங்கத்தை சார்ஜாவில் இருந்து சென்னைக்கு யாருக்காக கடத்தி வந்தார்? என பிடிபட்ட உஸ்மானிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story