பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கரூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்,
ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில், சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உதவியதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஈழதமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறியும், இது தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரூர் 80 அடி சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன் வரவேற்று பேசினார். கழக அமைப்பு செயலாளர் அ.பாப்பாசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், கீதா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
ஊழலுக்கு வழிவகுத்த தி.மு.க.வினரே அதனை ஒழிப்பதற்கு பாடுபடுவதாக கூறிவருவது நகைப்புக்குரியதாக உள்ளது. தி.மு.க.வை மக்களும் நம்ப தயாராக இல்லை. ஆனால் அ.தி.மு.க. மீது தி.மு.க.வினர் சுமத்தும் குற்ற சாட்டுக்கெல்லாம் தகுந்த பதிலை அளித்து வருகிறோம். தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் ஈழதமிழர்கள் பலர் சிங்களராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்டனர்.
அப்போது மத்தியில் இருந்த காங்கிரசும் துணை போனது. இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அந்த 2 கட்சியினரும் சேர்ந்து தான் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி, மருத்துவ உதவி உள்ளிட்டவை அளித்துள்ளதாக சமீபத்தில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறியிருப்பது வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அவர்கள் மீது போர்குற்ற விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டம், சாலை அமைத்தல், மேம்பாலம் கட்டுதல் என பல வளர்ச்சி திட்டங்கள் நடக்கிறன. இந்த சூழலில் அரவக்குறிச்சியில் கோரிக்கைகளை நிறைவேற்றகோரி அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் உண்ணாவிரதம் என கபட நாடகம் ஆடுகிறார். அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களின் பலத்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், இளைஞரணி தலைவர் வி.சி.கே.பாலகிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கே.சி.பரமசிவம், மாநில அமைப்புசாரா கட்டுமான பிரிவு செயலாளர் ராயனூர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story