பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது


பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 27 Sept 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி,

பெரியார் சிலையை அவமரியாதை செய்த நபர்களை கண்டித்தும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் முருகையன் தலைமை தாங்கினார்.

மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் கவிதம்பி, நகர செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குணசேகரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சித்தார்த்தன், மாவட்ட மகளிரணி தலைவர் கலைவாணி, கோட்டூர் ஒன்றிய தலைவர் புஷ்பநாதன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் எழிலரசன், த.மா.கா. நகர செயலாளர் கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story