திருப்போரூர் முருகன் கோவிலில் நீதிபதிகள் குழு ஆய்வு


திருப்போரூர் முருகன் கோவிலில் நீதிபதிகள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 27 Sept 2018 2:49 AM IST (Updated: 27 Sept 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் முருகன் கோவிலில் மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்போரூர், 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்போரூர் முருகன் கோவிலில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமையிலான நீதிபதிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவில் உற்சவர், மூலஸ்தானம் கோவில் உற்சவர் சிலை, குளம், உணவு மண்டபம், கண்காணிப்பு கேமரா, கோவில் உண்டியல், தங்கத்தேர் அலுவலகம், புதியதாக அமைக்கப்பட்ட மண்டபம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். பின்னர் குடிநீர் பகுதியை சுத்தமாக வைக்கும்படி கோவில் நிர்வாகத்திடம் கூறினர். இதில், மாவட்ட நீதிபதி, குற்றவியல் நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், குழுவினரை வரவேற்றார். பின்னர், அவர்களுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தார். ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தலைமை நீதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

Next Story